பிரிட்டிஷ் அகாடமி பரிசுக்கு தேர்வு

பாரத வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர் மஹ்மூத் மம்தானி, உலகளாவிய கலாச்சார புரிதலுக்கான 2021 பிரிட்டிஷ் அகாடமி புத்தகப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் உலகெங்கிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். 75 வயதான மஹ்மூத், மும்பையில் பிறந்த உகாண்டா கல்வியாளரும் எழுத்தாளரும் ஆவார். இந்த இறுதிப்பட்டியலில், இலங்கையில் பிறந்த கேம்பிரிட்ஜ் வரலாற்றாசிரியர் சுஜித் சிவசுந்தரம், ஸ்காட்லாந்தை சேர்ந்த கால் ஃப்ளைன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.