இந்து முன்னணியின் சத்ரு சம்ஹார ஹோமம்

விநாயகர் சதுர்த்தி விழா தடைகள் நீங்கி எழுச்சியோடு நடைபெற வேண்டி, நெல்லை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், சுத்தமல்லி ஸ்ரீ ஜெய மாருதி ஞான தர்ம பீடத்தில் சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற்றது. இதில், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில செயலாளர் குற்றாலநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.