போதைப்பொருள் பயங்கரவாதம்

ஜம்முவில் ஹந்த்வாராவின் கைரோ பாலத்தில் வாகன சோதனையின்போது, ரூ. 20,01,000/- மற்றும் 2 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணையில் 15 கிலோ ஹெராயின் மற்றும் ரொக்கப் பணம் ரூ. 1.15 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட ஷோகத் சலாம் பரே, ஆசிப் குல், அல்தாஃப் அகமது ஷா, ரோமேஷ் குமார், முதசிர் அகமது தார், அமின் அல்லாய், அப்துல் ரஷீத் ஆகியோர் மீது தேசிய புலனாய்வு முகமை, ஜம்முவில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர். நேக்ரோ டெரரிசம் எனப்படும் போதைப்பொருள் பயங்கரவாதிகளான இவர்கள், போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பது, அதன் மூலம் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத செயல்களை ஊக்குவிப்பது போன்றவற்றில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.