வானியல் ஆய்வாளருக்கு கௌரவம்

இந்திய வானியல் ஆய்வகம் (ஐ.ஐ.ஏ)வில் பொறியியலாளராக இருப்பவர் டார்ஜே அங்சுக். இவர், ஐ.ஐ.ஏவின் லடாக் ஆய்வகத்தில் பொறியாளராக பணி புரிகிறார். லடாக் பிராந்தியத்தில் வானியலின் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிப்பதற்காக அவர் பல அரிய புகைப்படங்களையும் காட்சிப்படுத்தியுள்ளார். இவரது சிறந்த வானியல் படங்கள் தி நியூயார்க்கர் இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இவர் தற்போது சர்வதேச வானியல் மையத்தின் 11 கௌரவ உறுப்பினர்களில்  ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் உள்ள ஒரே பாரத தேசத்தவர் இவர்தான்.