மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை இணைந்து டிரோன் எனப்படும் ஆளில்லா வான்வழி வாகனத்திற்கான திட்ட ஒப்பந்தத்தில் (பி.ஏ) கையெழுத்திட்டது. பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சியின் (டி.டி.டி.ஐ) அடைப்படையில், பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தம் ஜனவரி 2006ல் கையெழுத்திடப்பட்டது. எனினும், செயல்படுத்தப்படாமல் இருந்த இது மீண்டும் ஜனவரி 2015ல் புதுப்பிக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் கூட்டுத் தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஊக்குவிப்பது, பாரதம், அமெரிக்க ராணுவத்திற்கான எதிர்காலத் தொழில்நுட்பங்களின் இணை உற்பத்தி, இணை வளர்ச்சி, வாய்ப்புகளை உருவாக்குவது. டி.ஆர்.டி.ஓவின் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாப்ளிஷ்மென்ட் (ஏ.டி.இ), பாரத விமானப்படை ஆராய்ச்சி ஆய்வகத்தின் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் டைரக்டரேட் (ஏ.எப்.ஆர்.எல்) ஆகியவையும் இதில் இணைந்து பணியாற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.