சென்னை விளாடிவாஸ்டாக் திட்டம்

ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகரில் கிழக்கு பொருளாதார மாநாடு நடந்தது. இதில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி, ‘பாரதம் ரஷ்யா இடையே நீண்ட கால நெருக்கமான நட்புறவு உள்ளது. இரு நாடுகளும் இணைந்து சர்வதேச எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும். கொரோனா தடுப்பூசியிலும் இரு நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ரஷ்யாவின் யமால் முதல், விளாடிவாஸ்டாக் வரையும், அங்கிருந்து தமிழகத்தின் தலைநகர் சென்னை வரையிலும் நடைபெறும் எரிவாயு கடல்சார் தொழில் வழித்தட போக்குவரத்து திட்டப் பணிகளில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். இப்பணி விரைவாக நடைபெற்று வருகிறது. தற்போது பாரதத்தின் மசகான் டாக்ஸ் நிறுவனம், ரஷ்யாவின் ஸ்வெஸ்டா நிறுவனத்துடன் இணைந்து கப்பல் கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. இவை மகிழ்ச்சி அளிக்கிறது’ என பேசினார்.