வ.உ.சியின் 150வது பிறந்த நாள் விழா, அரசு சார்பில் கொண்டாடப்படும்’ என தமிழக அரசு அறிவித்தது. அதனை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், துாத்துக்குடி மாநகரில் முதன்மை சாலையான மேலபெரிய காட்டன் சாலை, இனி ‘வ.உ.சிதம்பரனார் சாலை’ என அழைக்கப்படும், ஒட்டப்பிடாரத்தில் அவர் வாழ்ந்த நினைவு இல்லமும், திருநெல்வேலியில் உள்ள மணி மண்டபமும் புனரமைக்கப்படும். அங்கு அவரது வாழ்க்கை வரலாற்றை மக்கள் அறியும் வகையில், ஒலி ஒளி காட்சிகளக அமைக்கப்படும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், வ.உ.சிதம்பரனார் பெயரில் புதிய ஆய்விருக்கை அமைக்கப்படும். ‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படும். தமிழ் நிகர்நிலை கல்விக் கழகம் வாயிலாக, அவர் எழுதிய நுால்கள், கையெழுத்துப் பிரதிகள் இணையதளத்தில் மின்மயப்படுத்தி வெளியிடப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றன. இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் வ.உ.சி துறைமுக வாசலில், உள்ள வ.உ.சியை கொடுமைப்படுத்திய ஆஷ் துரையின் நினைவிடத்தை அகற்றக் கோரும் தேசபக்தர்களின் வேண்டுகோளையும் நிறைவேற்றுவாரா முதல்வர் ஸ்டாலின்?