சட்டசபையில் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ‘கோயில்களில் மொட்டை அடிப்பதற்கு நாளை முதல் கட்டணம் கிடையாது. ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும், இந்த ஆண்டு இறுதிக்குள் கோயிலுக்கு சொந்தமான 1,000 கோடி ரூபாய் சொத்துகள் மீட்கப்படும், அர்ச்சகர், ஓதுவார்களுக்கு பயிற்சி கால ஊக்கத்தொகை 3 ஆயிரம் ரூபாயாக உயர்வு, வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம், தமிழகத்தில் 10 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள், தைத் திருநாளில் அர்ச்சகர்களுக்கு ஊழியர்களுக்கு புத்தாடை, திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூரில் நாள் முழுவதும் அன்னதானம், கோயில் பாதுகாப்புக்கு 10 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம்’ என்பது போன்ற அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.