பிகாரின் ஐக்கிய ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர் கோபால் மண்டல், ரயிலில் உள்ளாடைகளுடன் மட்டும் சுற்றித் திரிந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ‘எனக்கு வயிறு சரியில்லை அதனால்தான் உள்ளாடையுடன் இருந்தேன்’ என அதற்கு காரனம் கூறியுள்ளார். அவரது கோலத்தை கண்ட சக ரயில் பயணிகள் அவரை ஆடை உடுத்துமாறு கூறியதற்கு அவர்களை சுட்டுக்கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார் கோபால் மண்டல். பின்னர், ரயில்வே காவலர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.