நமது தேசத்தில் பல்வேறு துறைகளில் சேவை மற்றும் சாதனை புரிந்தோருக்கு, மத்திய அரசின் சார்பில் ஆண்டு தோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ உள்ளிட்ட நாட்டின் மிக உயரிய இந்த ‘பத்ம’ விருதுகள் பெறு தகுதி உடையோரின் பெயர்களை பொதுமக்கள் பரிந்துரைக்க வேண்டும். அதனை நேரடியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின், https://padmaawards.gov.in என்ற வலைதளத்தில் வரும் 15ம் தேதிக்குள் பரிந்துரைக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. விருது பெறுவோர் குறித்த விபரங்கள், அடுத்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும்.