சி.பி.ஐ மாவோயிஸ்டு அமைப்பை சேர்ந்த பிரபல மாவோயிஸ்ட்டும் மண்டல தளபதியுமான மகாராஜ் பிரமாணிக் ஜார்க்கண்ட் மாநில காவல்துறையிடம் சரணடைந்தார். இவரை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல, சத்தீஸ்கர் சுக்மா மாவட்டத்தில் நான்கு பெண் மாவோயிஸ்டுகள் உட்பட 15 மாவோயிஸ்டுகள் காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் முன் சரணடைந்தனர். இவர்களில் 10 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தங்களுக்கு ஆயுதம் வழங்கியவர்கள், மாவோயிஸ்ட் குழு உறுப்பினர்களின் செயல்பாடுகள் போன்ற முக்கியத் தகவல்களை அவர்கள் தெரிவித்தனர். ஒரே நாளில் 16 முக்கிய மாவோயிஸ்ட்டு பயங்கரவாதிகள் சரணடைந்தது அவர்களின் அமைப்பிற்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.