ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கல்விக் கௌன்சில், ‘பயங்கரவாதத்திற்கு எதிரான, சமச்சீரற்ற மோதல்கள் மற்றும் முக்கிய சக்திகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கான உத்திகள்’ என்ற தலைப்பில் புதிய விருப்பப் பாடத்திட்டத்தை சேர்த்துள்ளது. ஜே.என்.யுவில் பி.டெக் பட்டப்படிப்பு முடித்த பொறியியல் மாணவர்கள் அதன் பிறகு, இரட்டைப் பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது, அதில் சர்வதேச உறவுகள் எனும் சிறப்புப் பாடப்பிரிவில் எம்.எஸ் படிப்போருக்காக இந்த விருப்பப்பாட திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட்டு கட்சியின் மக்களவை எம்.பி பினோய் விஸ்வம், உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சியினர் இந்த பாடதிட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர். அவர்கள் இதனை வரலாற்று சிதைவு, புவிசார் அரசியல், வகுப்புவாதத்தை இது வளர்க்கும், உயர்கல்வியை அரசியலாக்க இது ஒரு தளமாக பயன்படும் என்று கூறிவருகின்றனர். அவர்களின் இந்த கருத்துகள் பயங்கரவாதிகளுக்கு மறைமுக ஆதரவாகவே தெரிகிறது என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.