வரி செலுத்த கெடு நீட்டிப்பு

சமீபத்தில், வருமான வரித் துறையின் புதிய வலைதளத்தில் தொடர்ச்சியாக ஏற்படும் கோளாறுகள் காரணமாக, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், ‘வருமான வரி கணக்கு தாக்கல், வரி விலக்கு கோரல் உள்ளிட்டவற்றிற்கு கெடுவை நீட்டிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, மத்திய நிதியமைச்சகம் வருமான வரிச் சட்டம் 80ஜி பிரிவின் கீழ், 10 ஏ படிவத்தில் வரி விலக்கு பெற பதிவு செய்ய, விண்ணப்பிக்க 2022 மார்ச் 31 வரை கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 10ஏபி படிவத்தின் கீழ் விண்ணப்பிக்க 2022 மார்ச் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு ஏப்ரல் – ஜூன் காலாண்டு வருவாய் விவரத்திற்கு, படிவம் 15ஜி / 15எச் விண்ணப்பங்களை அளிப்பதற்கான கெடு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2020 – 21ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கெடு செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இக்காலக் கெடுவை நீட்டிப்பது குறித்து மத்திய நிதியமைச்சகம் தனது அறிக்கையில் இதுவரை ஏதும் தெரிவிக்கவில்லை.