கோவையை சேர்ந்த செயிண்ட் பால் கல்லூரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம் சார்பாக அதன் தலைவர் டேவிட் கடந்த 16-08-2021ல் கோவை வாழ் கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், வரும் விநாயகர் சதுர்த்தி அன்று, கிறிஸ்தவர்கள் அவரவர் பகுதியில் வாகனங்களில் சென்று ஜெபம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2017ல் 200 வாகனங்களில் 100 வார்டுகளில் சென்று ‘கோவையில் விக்கிரக ஆராதனை இருக்ககூடாது’ என அவர்கள் ஜெபித்தனர். அதன் விளைவாக, கலெக்டர் அனுமதியின்றி விநாயகர் சிலை வைக்ககூடாது, சிலையின் உயரம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வருடமும் இதனை சிறப்பாக நடத்த வேண்டும் என கிறிஸ்தவர்களை கேட்டுக்கொண்டுள்ளார். ஹிந்து விழாக்களை தடுக்கும் விதத்திலும் அவர்களது மனதை புண்படுத்தும் விதத்திலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அக்கல்லூரியின் தலைவர் டேவிட்டை கைது செய்வதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு கோவைப் பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர்.