மாட்டும் மற்றொரு மகா., அமைச்சர்

மகாராஷ்டிராவில் உள்ள தொழில் அதிபர்கள், காண்டிராக்டர்கள், பார்கள் என பல இடங்களில் இருந்து மாதம்தோறும் 100 கோடி மாமுல் வசூலித்துத்தர காவல்துறை கமிஷனரிடம்,முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கேட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதில், காவல்துறை கமிஷனர் பரம் பிர் சிங், சச்சின் வாசே உள்ளிட்டோரும் சிக்கினர். இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏவும் அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா போக்குவரத்து அமைச்சர் அனில் பரப்பின் பெயரும் இதில் இடம் பெற்றுள்ளதால், அவரை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இவர் மீது ஏற்கனவே, மும்பை போக்குவரத்து நிறுவனமான பி.எம்.சியின் ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூலித்தல், ஆர்.டி.ஓ இடமாற்றங்கள், எஸ்.டி டிக்கெட் கோத்தலா, சட்டவிரோத டபோலி ரிசார்ட் உள்ளிட்ட புகார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.