முன்பெல்லாம் பொறியியல் கல்வியில் 2ம் ஆண்டில் பெயிலானால் 3ம் ஆண்டு போக முடியாது, 3ம் ஆண்டு பெயிலானால் 4ம் அண்டு போக முடியாது. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். எனவே, இதனை முன்னிட்டு மாணவர்கள் பரிட்சையில் பெயில் ஆனாலும், தொடர்ந்து அடுத்தடுத வருடங்களுக்கு செல்லவும் தேர்வுகளை நடுநடுவே எழுதிக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும். அது விரைவில் அறிவிக்கப்படும் என்ற ஒரு பொன்மொழியை சட்டசபையில் உதிர்த்திருக்கிறர் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. பொறியியல் துறையில் அரியர் வைத்தாலும் அடுத்த வருட படிப்பைத் தொடரலாம். அரியரை ஒவ்வொரு செமஸ்டரிலும் எழுதிக்கொள்ளலாம் என்ற அடிப்படைகூட தெரியாத இவரை எப்படி உயர்கல்வித்துறை அமைச்சராக ஸ்டாலின் நியமித்தார். அது குறித்து அமைச்சருக்குத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, சட்டசபையில் பேசுவதற்கு முன்பு அதிகாரிகளிடம் அது குறித்து கேட்டறிந்து பேசி இருக்கலாமே என நெட்டிசன்கள் பொன்முடியை சமுக வலைத் தளங்களில் கிண்டல் அடித்து வருகின்றனர்.