உயிர்த்தெழுதல் விபரீதம்

மக்களை மதமாற்றம் செய்யும் முயற்சியில், ஏழைகளுக்கு பணம், பொருள் கொடுத்து மதம் மாற்றுவது மட்டுமில்லாமல், சி.டி கொடுத்து நோயை நீக்குவது, பேய் ஓட்டும் சடங்கு, ஆன்லைன் வழியாகவே பேய் ஓட்டுவது என புதிய புதிய நாடகங்களை கிறிஸ்தவ பாதிரிகள் தினம்தோறும் அரங்கேற்றுகின்றனர். அவ்வகையில் சாம்பியா நாட்டில் உள்ள சியோன் தேவாலயத்தின் போதகர் ஜேம்ஸ் சகாரா, ஏசு கிறிஸ்துவைப் போலவே தாமும் மூன்று நாட்களில் உயிர்த்தெழுப்ப முடியும் என்று மக்களிடம் கூறி தன்னை உயிருடன் புதைக்கச் சொன்னார். அதன்படி, மூன்று உதவியாளர்கள் அவரது கைகளைக் கட்டி உயிருடன் மண்ணில் புதைத்தனர். மூன்று நாட்களுக்குப் பிறகு, உதவியாளர்களும் மக்களும் மீண்டும் அவரை தோண்டி எடுத்தபோது பாஸ்டரின் உயிரற்ற உடல்தான் அவர்களுக்குக் கிடைத்தது. ஆயினும், அவரைப் பின்பற்றுபவர்கள் அவரை உயிர்ப்பிக்க பல முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், கடைசிவரை எந்த அதிசயமும் நடக்கவில்லை. இதையடுத்து பாஸ்டரை புதைக்க உதவிய மூன்று தேவாலய உறுப்பினர்களில் ஒருவர் மட்டும் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.