ஆப்கானிஸ்தானை அராஜக வழியில் கைப்பற்றிய தலிபான்கள், ஆப்கனில் உள்ள பெண்களை பத்திரமாக தங்கள் வீட்டிலேயே இருக்குமாறு கூறியுள்ளனர். தலிபான் போராளிகளுக்கு பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்ற அடிப்படை குறித்துத் தெரியாததும், அதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படாததும்தான் இதற்கு காரணம். இதனாலேயே ஆங்காங்கு பெண்கள் மீது பல அத்துமீறல்கள் தொடர்ந்து நடக்கின்றன என கூறியுள்ளனர். பெண்களின் சுதந்திரத்தை மதிக்கப் போவதாக உறுதியளித்த ஒரே வாரத்தில் தங்கள் ஆட்சியில் பெண்கள் தங்கள் வீரர்களிடமிருந்தே பாதுகாப்பாக இல்லை என்பதை தலிபான்கள் ஒப்புக்கொண்டுள்ளது சிந்திக்கத்தக்கது.