லவ் ஜிஹாத்தின் மற்றொரு வழக்கு மத்திய பிரதேசத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இர்பான் கான் என்ற ஒரு முஸ்லிம் இளைஞர், தன்னை ரோஷன் என்ற ஹிந்துவாக அடையாளப்படுத்திக்கொண்டு கல்லூரியில் படிக்கும் ஒரு ஹிந்து பெண்ணை காதலித்து ஏமாற்றி மணந்தார். பின்னர் அப்பெண்ணை மதம் மாற கட்டாயப்படுத்தினார். கடந்த பிப்ரவரியில் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக மதம் மாற்றி, அலியா பியின் என்ற புதிய அடையாளத்தை வழங்கினார். அப்பெண் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்கவே, அப்பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளனர் இர்பானின் குடும்பத்தினர். முதுகு எலும்பு முறியும் அளவுக்கு கடுமையாக தாக்கப்பட்டாள். பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஆகஸ்ட் 19 அன்று இர்பானின் வீட்டில் இருந்து தப்பி காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். காவல்துறை தற்போது இவ்வழக்கை விசாரித்து வருகிறது.