கல்யாண் சிங்கிற்கு மரியாதை

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்  ஆகஸ்ட் 21ல் காலமானார். சிறந்த ராமபக்தரான அவர், அயோத்தி ராமர் ஆலயத்திற்காக தனது முதல்வர் பதவியை தியாகம் செய்தார். 1992 டிசம்பரில் அயோத்தியில் கர சேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காவல்துறையை அனுமதிக்கவில்லை. இந்நிலையில், அவரை கௌரவிக்கும் வகையில், தற்போது, உத்தர பிரதேசம் புலந்தசாஹரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் லக்னோவில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற்றுநோய் மருத்துவமனைக்கு ராமபக்தர் கல்யாண் சிங்கின் பெயர் சூட்டப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், அயோத்தியில் ராம ஜென்மபூமிக்கு செல்லும் சாலைக்கும் லக்னோ, பிரயாக்ராஜ், புலந்த்ஷஹர், அலிகார் ஆகிய இடங்களில் தலா ஒரு சாலைக்கும் முன்னாள் உபி முதல்வர் கல்யாண் சிங்கின் பெயரிடப்படும் என கூறியுள்ளார்.