ஆர்.டி.ஐயில் அதிகாரி கையெழுத்து

தகவல் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ) குறித்த ஒரு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், ‘தகவல் ஆணையம் அளிக்கும் தகவல்களில், ஏதேனும் குறைகள் இருந்தால் அதை எதிர்த்து மேல் முறையீட்டு அதிகாரியிடம் முறையீடு செய்ய தகவல் அறியும் உரிமை சட்டம் மக்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. தவறான தகவல் அளிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏதுவாக பதில்களின் ஒவ்வொரு பக்கத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் கையெழுத்துடன் அவரது ஆதார் விபரங்களையும் வழங்க வேண்டும். தகவல் ஆணையம், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்’ என உத்தவிட்டுள்ளது.