கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில்களில் முன்பதிவு பயணத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. முன்பதிவு இல்லாத ரயில்களை மீண்டும் இயக்க கோரிக்கை எழுந்ததை அடுத்து ஆகஸ்ட் 30ம் தேதி முதல், திருச்சி, காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, செங்கோட்டைக்கு இடையே 5 முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்படும். மேலும், எர்ணாகுளம், கொல்லம், கன்னூர், மங்களூர் இடையேயான முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களும் ஆகஸ்ட் 30ம் தேதி முதல் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.