கடந்த ஆண்டு கர்நாடக மாநிலம், மைசூருவில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில், காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி வெற்றி பெற்று, மைசூரு மாநகராட்சியை கைப்பற்றியது. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் போலி சொத்து விவரம் தாக்கல் செய்ததால் ம.ஜ.தவின் ருக்மினி மாதே கவுடாவின் மேயர் பதவி பறிக்கப்பட்டது. காலியான மேயர் பதவிக்கு, மைசூரு மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தேர்தல் நடந்தது. பா.ஜ.க சார்பில் சுனந்தா பாலநேத்ரா, காங்கிரஸ் டார்பில் சாந்தகுமார், அஸ்வினி அனந்த் ஆகியோர் மேயர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர். இத்தேர்தலில், பா.ஜ.கவின் சுனந்தா பாலநேத்ரா வெற்றி பெற்று மைசூரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மைசூரு மாநகராட்சி வரலாற்றில், பா.ஜ.க அதனை கைப்பற்றுவது இது முதல் முறை.