உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.பியான அதுல் ராய் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து அதுல் ராய் காவல்துறையில் சரணடைந்தார். அவரை காவலர்கள் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி டெல்லி உச்சநீதிமன்றத்தின் வாயில் அருகே பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது காதலனுடன் தீக்குளித்தார். அவரது காதலன் கடந்த சனிக்கிழமையன்று உயிரிழந்தார். உயிருக்குப் போராடி வந்த அந்த பெண் செவ்வாய் கிழமையன்று உயிரிழந்தார். முன்னதாக அவர்கள் தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், சிறையில் அதுல் ராய்க்கு சலுகைகள் தாராளமாக வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்த அவர்கள், எம்.பியோடு சேர்த்து உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மூத்த ஐ.பிஎ.ஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு நீதிபதி மீதும் குற்றம்சாட்டி இருந்தனர்.