இஸ்ரேலிய உளவு மென்பொருளான பெகாசஸ் ஸ்பைவேர் குறித்து பேசிய ராகுல் காந்தி, ‘நான் அவர்களின் இலக்கு அல்ல. நான் பயப்படவில்லை. நான் பயப்பட மாட்டேன். இந்த நாட்டில், நீங்கள் ஊழல்வாதியாக திருடனாக இருந்தால் நீங்கள் மோடிக்கு பயப்படுவீர்கள். அப்படி இல்லை என்றால் நீங்கள் மோடிக்கு பயப்பட மாட்டீர்கள்’ என்று கூறினார். இந்த வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்துகொண்ட அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ‘ஊழல்வாதிகளுக்கும் திருடர்களுக்கும் மோடி அரசின் மீது பயம் இருப்பதாக ராகுல் காந்திகூட ஒப்புக்கொள்கிறார். ஒரு மாறுதலுக்காக அவர் உண்மையைப் பேசுவதைப் பார்க்க நன்றாக இருக்கிறது. இது இந்த ஒருமுறையோடு நின்றுவிடாது என நான் நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.