பாரதம் வந்த ஸ்ரீ குரு கிரந்த சாஹிப்

இந்திய விமானப்படை விமானத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சீக்கியர்கள், ஹிந்துக்கள் என 78 பேருடன் சீக்கியர்களின் புனித நூலான ஸ்ரீ குரு கிரந்த சாஹிப்பின் மூன்று ஸ்வரூப் (நூல்கள்) டெல்லி வந்தடைந்தது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் மற்றும் ஆர்.பி.சிங் ஆகியோர் காபூலில் இருந்து கொண்டுவரப்பட்ட பழமையான ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பின் மூன்று ஸ்வரூப்பையும் பக்தியுடன் பெற்றுக்கொண்டனர். இந்த புனித நூல்கள், டெல்லியின் மகாவீர் நகர் பகுதியில் உள்ள குரு அர்ஜன் தேவ் ஜி குருத்வாராவுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும் என ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.