சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறிய ஹிந்து அறநிலையத்துறை அக்கோயிலை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், கோவிலை கையகப்படுத்திய அரசாணையை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார்.