கொரோனாவை முன்னிட்டு அனைத்து மத ஊர்வலங்களுக்கும் மத்திய பிரதேசத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், உஜ்ஜையினி மாவட்டத்தில் உள்ள கீதா காலனிப் பகுதியில் தடையை மீறி முகரம் ஊர்வலம் நடத்த முஸ்லிம்களின் கூட்டம் ஒன்று கூடியது. ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. உடனேயே அக்கூட்டத்தில் இருந்தச் சில முஸ்லிம் இளைஞர்கள் நமது நாட்டிற்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினர். இதனால் தற்போது கோஷங்கள் எழுப்பிய 10 பேர் மீது தேசத்துரோகக் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோக்கள் மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பிய நபர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக உஜ்ஜையினி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சத்யேந்திர கௌஷல் தெரிவித்துள்ளார். நமது தேசத்திற்கெதிரான தலிபான் மனப்பான்மை சகித்துக்கொள்ளப்படாது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.