அயோத்தியை இணைக்கும் புல்லட் ரயில்

அயோத்தியை சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் சேர்க்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதில் ஒன்றாக தேசிய அதிவேக ரயில் கழகம் (NHSRC) அயோத்தியை புதுடெல்லியை இணைக்கும் புல்லட் ரயில் திட்டத்தை தொடங்க, தடையில்லா சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளது. இத்திட்டத்தின்படி, அதிவேக புல்லட் ரயில் புதுடெல்லியை அயோத்தியுடன் இணைக்கும். முன்னதாக, டெல்லியையும் வாரணாசியையும் ஆக்ரா, லக்னோ, பிரயாக்ராஜ் வழியாக இணைக்க 941.5 கி.மீ பாதையின் விரிவான திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இப்போது அதில் அயோத்தியும் இணைக்கப்பட்டுள்ளது. லக்னோவிற்கும் அயோத்தியாவுக்கும் இடையேயான 130 கி.மீ தனி இணைப்பு பாதை இத்திட்டத்தில் சேர்க்கப்படும். இந்தத் தடத்தில் ரயில்கள் 320 கி.மீ வேகத்தில் பயணிக்கும். இது டெல்லி அயோத்தி இடையே பயண நேரத்தை மூன்று மணி நேரமாக குறைக்கும். 7 ஆண்டுகளில் இது செயல்பாட்டிற்க்கு வரும். இரண்டு புல்லட் ரயில்கள் இயக்கப்படும். இதற்காக தற்போது எட்டு கிராமங்களில் 75 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த விவசாயிகளுக்கு, பிரதம மந்திரி வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் ஒரு வீடு, அரசுக்கு விற்ற நிலத்திற்கான பண இழப்பீடு உள்ளிட்டவை தரப்பட்டுள்ளன.