காஷ்மிர் சர்ச்சையில் காங்கிரஸ்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட சித்துவின் நான்கு முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான மல்விந்தர் சிங் மாலி, சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘ ஜம்மு காஷ்மிர் என்பது ஒரு தனி நாடு. அது காஷ்மீரி மக்களுக்கு சொந்தமானது. பாரதமும் பாகிஸ்தானும் அதனை ஆக்கிரமித்துள்ளன’ என, அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பா.ஜ.க, அகாலி தளம் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கின் ஆதரவாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.