பாகிஸ்தான் தூதரகத்தில் பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தான் லாகூர் கோட்டையில் உள்ள சீக்கிய பேரரசர் ரஞ்சித் சிங்கின் சிலை சில நாட்களுக்கு முன் உடைக்கப்பட்டது. அதைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா, ‘பாகிஸ்தானில் நடைபெற்றிருக்கும் பேரரசர் ரஞ்சித் சிங் சிலை உடைப்பு சம்பவம், அவர்களின் தலிபான் மனநிலையையே வெளிப்படுத்தியுள்ளது. அதை நாங்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். பாகிஸ்தானின் இந்த மனோபாவம் தொடர்ந்தால், அந்த நாட்டின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர், விரைவில் பாரதத்தின் அங்கமாகும்’ என்ற கூறினார். இந்த போராட்டத்தையொட்டி டெல்லி பாகிஸ்தான் தூதரகம் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.