காஷ்மீரில் கல்வி ஆலோசனை நிறுவனங்களில் பணிபுரியும் ஹுரியத் தலைவர்கள் உட்பட பலர் பாகிஸ்தான் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ், பொறியியல் படிப்பு உள்ளிட்ட கல்விகளை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனத்துடன் சேர்ந்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் நிதியின் ஒருபகுதியை பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவ சீட்டுக்கு ரூ.12 லட்சம்வரை பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஹூரியத் தலைவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் 40 எம்.பி.பி.எஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு சுமார் 4 கோடி ரூபாய் பணம் இதில் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இதற்கான வங்கி ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த நிதியில் ஒருபகுதியை பயங்கரவாதம் சதித்திட்டங்களுக்கு பயன்படுத்திய ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இந்த விசாரணையில், முகமது அக்பர் பட், பாத்திமா ஷா, முகமது அப்துல்லா ஷா, சப்சார் அகமது ஷேக் ஆகியோர், சட்டவிரோத செயல்கள் தடுப்பு, பணப்பரிமாற்ற தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் சி.ஐ.டி பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.