கருப்பர் கூட்டம் மிரட்டல்

ஹிந்து மதத்தையும் கந்தசஷ்டி கவசம், முருகன் உள்ளிட்ட ஹிந்து கடவுள்களையும் தொடர்ந்து அவமதித்து யூடியூப் வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டு கடந்த 8 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டார் கருப்பர் கூட்டத்தை சேர்ந்த சுரேந்தர். தி.மு.க ஆட்சிக்கு வந்த நிலையில் இவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்வுடன், இனியும் தொடர்ந்து ஹிந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார். இது, ஹிந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருப்பர் கூட்டத்தினை சேர்ந்தவர்கள் அனைவரும் பெரியாரியவாதிகள், கம்யூனிசவாதிகள், தி.மு.கவினராகவே இருக்கின்றனர். எனவே, தற்போது தமிழகத்தை ஆளும் தி.மு.க தலைமையிலான அரசு, இவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்குமா, அவர்களுக்கு ஆதரவளிக்குமா அல்லது ஆடவிட்டு வேடிக்கை பார்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.