டெல்லி சிறுமி பாலியல் கொலை வழக்கில், அந்த குடும்பத்தினரின் சம்மதத்தின் பேரிலேயே தான் புகைப்படத்தை வெளியிட்டதாக ராகுல் கூறினார். ஆனால், ராகுலின் கூற்றை ‘பொய்’ என திட்டவட்டமாக அக்குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, இது குறித்து கூறுகையில், முதலில் ராகுல் காந்தி இந்த பிரச்சினையை அரசியலாக்கினார், பின்னர் பெற்றோரின் படத்தைப் பகிர்ந்து பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தினார். சட்டம் அதைப் பற்றி கேட்டபோது, அவர் அனைவரிடமும் பொய் சொல்கிறார்’ என கூறினார். ‘ராகுலின் இந்த பொய் காரணமாக அவரது டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகக் கணக்குகளை மீண்டும் முடக்க வேண்டும்’ என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கோரியுள்ளார்.