ஏசுவுடன் ஜெகன் மோகன் ரெட்டி ஒப்பீடு

ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டியை, ‘மனிதகுலத்தின் மீட்பர். ஏசு கிறிஸ்துவைபோல, அவரும் கடவுளின் மகன்’ என்று கூறினார் பி.கண்ணாவரம் சட்டமன்ற உறுப்பினரான கொண்டேட்டி சிட்டிபாபு. இது, ஆந்திராவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், ‘கல்வி முறையில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்படுத்தினார். வீட்டு வசதி திட்டம் கொண்டுவந்தார், அவரது திட்டங்கள் சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒரு வரப்பிரசாதம்’ என புகழாரம் சூட்டியுள்ளார். முன்னதாக, இரு தினங்களுக்கு முன், ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மதுசூதன் ரெட்டி, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ரூ. 2 கோடி செலவில் கோவில் கட்டி உள்ளார் என்பதும், கிறிஸ்தவரான ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநில முதல்வராக பதவி ஏற்றது முதல், கிறிஸ்தவர்களுக்கான சலுகைகள், அரசு சார்பில் அவர்களுக்காக விஷேஷ பரிசுகள், பட்டியலினத்தவரை கிறிஸ்தவர்களாக்கும் முயற்சி, கட்டாய மதமாற்றம், ஹிந்து விரோத நடவடிக்கைகள் என பல குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.