உதித் ராஜ் என்ர காங்கிரஸ் கட்சித் தலைவர், அவரின் கருத்துகளால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்பவர். உன்னாவ் பெண்கள் மரணம் தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒரு போலி செய்தியை பரப்பியதற்காக இவர் மீது குற்றப்பத்திரிகை ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. எஸ்.சி, எஸ்.டி சட்டத்தை பயன்படுத்தி ஒரு பத்திரிகையாளரை மிரட்டியது என சில குற்றச்சாடுகளும் இவர் மீது உண்டு. இந்நிலையில், சமீபத்தில் உதித் ராஜ் தனது டுவிட்டர் பதிவில் 1960 களில் ஆப்கானிஸ்தானில் பெண்களின் சுதந்திரம் குறித்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார், ‘அக்காலத்தில் ஆப்கனில் பெண்கள் சுதந்திரமாக இருந்தனர். ஆனால் அவர்கள் தற்போது மதவெறியின் காரணமாக பெண்கள் அடிமைத்தனம், புர்காவால் சிறைப் படுத்தப்பட்டுள்ளனர். பாரத முஸ்லிம் சமூகமும் தற்போது அந்த திசையில்தான் நகர்கிறது’ என கருத்துத் தெரிவித்தார். அவரது இந்த கருத்தை பொறுத்துக்கொள்ள முடியாத சுமார் 7 ஆயிரம் முஸ்லிம்கள் அவரை கடுமையாக எதிர்த்துள்ளனர். பலர் அவரது தாய், சகோதரிகளையும் கடுமையாகவும் கீழ்தரமாகவும் தாக்கி கருத்துகள் பதிவிட்டனர். அவரைப் பன்றியின் மகன் என்றும் தூற்றியுள்ளனர்.