மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களுல் டாடா மோட்டார்ஸ், குஜராத் மாநில அரசுடன் இணைந்து அகமதாபாத்தில் பழைய வாகனங்களை அழித்து மறுசுழற்சி செய்யும் மையத்தை அமைக்க உள்ளது. மாநில அரசின் துறைமுகங்கள் மற்றும் போக்குவரத்து துறையுடன் இதற்காக இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ‘டாடா மோட்டார்ஸ் நிறுவன வரலாற்றில் இது ஒரு மைல்கல், பாரதத்தில் பாதுகாப்பான, தூய்மையான வாகனங்களை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை, சுற்றுசூழல் மேம்பாடு, சுழற்சிப் பொருளாதாரக் கட்டமைப்பு ஆகியவற்றில் இது ஒரு முக்கிய படி’ என டாடா மோட்டார்ஸின் முன்னணி நிர்வாகி கிரிஷ் வாக் தெரிவித்துள்ளார்.