மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடையச் செய்யும் வகையில் ‘மக்கள் ஆசி யாத்திரை’ எனும் சுற்றுப் பயணத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவையில் நேற்றுத் தொடங்கினார். வரும் 18ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெற உள்ளது. கோவையை அடுத்து நீலகிரி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளார். ‘மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றபின் மக்களை சந்திக்க தமிழகத்தில் யாத்திரை செல்கிறேன். நாடு முழுவதும் மக்கள் ஆசீர்வாத யாத்திரை நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றியே நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்’’ என்று முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.