ஜம்மு காஷ்மீரில் 1990களில் நடைபெற்ற முஸ்லிம் பயங்கரவாதிகளின் வன்முறையால் அங்கிருந்து அகதிகளாக வெளியேறிய காஷ்மீர் பண்டிட்டுகளின் வீடு, நிலம் உள்ளிட்டவை முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. சட்டப்பிரிவு 370 நீக்கத்தைத் தொடர்ந்து அவர்களை மீள்குடியேற்றம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. அந்த சட்டத்தை பயன்படுத்தி, காஷ்மீர பண்டிட்டுகளின் நிலங்களை மீட்க, முறைப்படுத்த, ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த ஜம்மு காஷ்மிர் துணைநிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஆய்வு செய்து புலம்பெயர்ந்தோர் விட்டுச் சென்ற சொத்துக்களைக் கையகப்படுத்தவும் 15 நாட்களுக்குள் பதிவுகளைப் புதுப்பித்து, அறிக்கைகளை அந்தந்த கோட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.