‘ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ்’ நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் சுதந்திர தினத்தன்று அனைத்து அலுவலகங்களிலும் தேசியக்கொடியை ஏற்ற கல்வித்துறை உட்பட அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டது. இதனையடுத்து அங்கு உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற அரசுத்துறை நிறுவனங்களில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிலையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதியும் முஸ்லிம் பயங்கரவாதியுமான புர்ஹான் வானியின் தந்தை முசாபர் வானி, தான் முதல்வராக உள்ள டிராலின் அரசு மேல்நிலைப் பள்ளியில், சுதந்திர தினத்தன்று தனது பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றினார். தேசிய கீதத்தையும் பாடினார். முன்னதாக, முசாபர் வானி தேசியக் கொடியை ஏற்ற மறுத்ததாகவும், இதனால் அவர் ராஜினாமா செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. அவர் அதனை வதந்தி என்று கூறி மறுத்தார். தான் ராஜினாமா செய்யவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். முன்னதாக, புர்ஹான் வானி கடந்த 2016ல் இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனது மரணத்தைத் தொடர்ந்து, அவனை நல்லவனாக, அப்பாவியாக சித்தரிக்க என்.டி.டி.வி, தி வயர் உட்பட பலர் முனைந்தனர். பத்திரிக்கையாளர் பர்கா தத் அவனை பயங்கரவாதி என கூறாமல் ‘பள்ளி தலைமை ஆசிரியரின் மகன்’ என்று குறிப்பிட்டார். முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்ணீர் வடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.