டெல்லி அரசு குறித்து வி.ஹெச்.பி

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மத்திய இணை பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ‘கெஜ்ரிவாக் தலைமையிலான டெல்லி அரசு, ஹஜ் இல்லத்தை அரசு நிலத்தில், அரசு பணத்தில் கட்டுவதை ஏற்கமுடியாது. கெஜ்ரிவால் அரசு, முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதிலும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதிலும் ஈடுபாடு காட்டுகிறது. டெல்லியை ஜிஹாதிகள், ஹிந்து விரோதிகள், தேச விரோதிகளின் தலைநகராக மாற்ற முயல்கிறது. அதனை வி.ஹெச்.பி அனுமதிக்காது. இறந்த முஸ்லீம் மருத்துவர் அனஸ் முஜாஹித் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறார், ஆனால் அதே கொரோனாவால் பலியான டாக்டர் கே.கே. அகர்வால் போன்ற டஜன் கணக்கான  ஹிந்து மருத்துவர்களுக்கு அவர் ஏதாவது செய்தாரா கெஜ்ரிவால் என்பதை டெல்லி மக்கள் சிந்திக்க வேண்டும். வரி செலுத்துவோரின் பணத்தை பசுவதையில் ஈடுபட்ட அக்லக் உள்ளிட்ட ஜிஹாதிகளுக்கு செலவழிக்கும் கெஜ்ரிவால், முஸ்லிம் ஜிஹாதிகளால் பலியான அங்கித் சக்சேனா, துருவ் தியாகி, ரியா கவுதம், யோகேஷ் குமார், டாக்டர் பங்கஜ் நாரங், அங்கித் கார்க், ராகுல் ராஜ்புத், ரத்தன் லால் உள்ளிட்டோரை நினைத்து பார்ப்பதில்லை. அவர் முல்லா, மௌல்வி, மியூசின்களுக்கு சம்பளம் அளிக்கிறார். ஆனால் கொரோனா காலங்களில்கூட ஹிந்து தர்மத்தை பாதுகாத்த ஏழை பூஜாரிகள் புரோகிதர்களுக்கு உதவவில்லை. லவ் ஜிஹாத் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை’ என குற்றம் சாட்டினார்.