பாரதத்தாய், பூமித்தாய், பிரதமர், உள்துறை அமைச்சர், தமிழக முதல்வர் மற்றும் பா.ஜ.க சட்ட மன்ற உறுப்பினர்களை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன் கைது செய்யப்பட்டவர் கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன். இவர் மீது ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன், செட்டிசார்விளையைச் சேர்ந்த திருவட்டாறு ஒன்றிய தி.மு.க செயலாளர் ஜான் பிரைட், காட்டாத்துறையைச் சேர்ந்த ஹென்சிலின் ஜோசப் உட்பட 8 பேர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உட்பட 6 பிரிவுகளில் காவல்துரையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் தலைமறைவான தி.மு.க ஒன்றியச் செலாளர் உட்பட 7 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.