ஜல்சக்தித்துறை அமைச்சரான கஜேந்திர சிங் ஷெகாவத், தனது டுவிட்டர் பதிவில், ‘தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி அணை, நீர் கசிவு மற்றும் பலவீனமான பாதுகாப்பு போன்ற பல உள்கட்டமைப்பு சிக்கல்களை சந்தித்து வந்தது. ஜல்சக்தி அமைச்சகம், இதற்காக டிரிப் (DRIP) ஏன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அணையின் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தி புதுப்பிக்க வெற்றிகரமாக உதவியது’ என தெரிவித்துள்ளார்.