கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி தமிழக அரசு நிகழாண்டு திருவிழா கொண்டாட்டங்களுக்கு தடை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக அரசின் பிடியிலிருக்கும் பெரிய ஆலயங்கள் தொடங்கி சாதாரண கிராமத்து சுடலைமாடசாமி கோயில் வரைக்கும் இந்தத் தடை நீள்கிறது.சங்கரன்கோயில் தொடங்கி உள்ளூர் கோயில் ஆடித்திருவிழா வரைக்கும் தடை ஏற்படுத்தப்படுகிறது.
ஆனால் கிறிஸ்தவர்களின் மாங்கனித் திருவிழாவும் முஸ்லிம்களின் பக்ரீத்தும் எந்த இடையூறுமின்றி பெரும் கூட்டத்துடன் நடத்தப்படுகின்றன. தமிழர்களின் பாரம்பரிய விழாக்களுக்கு தடை விதிப்பதுதான் திமுக அரசின் மதச்சார்பின்மையா?
பக்ரீத் கொண்டாட எந்தவொரு முஸ்லிமும் கலெக்டரிடம் மனு கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. தேவாலாயத் திருவிழாக்களுக்கு எந்த பாதிரியும் அனுமதி வேண்டி அணுகவில்லை. ஆனால் ஹிந்து சமுதாயம் மட்டும் தனது ஆலய விழாக்களுக்கு அனுமதி வேண்டி தாசில்தாரிடமும் கலெக்டரிடமும் மனு கொடுத்துக்கொண்டிருக்கிறது.
தனது விழாவைக் கொண்டாட ஆளும் அரசின் ஹிந்துக்கள் அனுமதியைப் பெறவேண்டுமென்றால் ஆளுபவர்கள் ஒளரங்கசீப்பாகவோ அல்லது ஆங்கிலேயர்களாகவோதான் இருக்கவேண்டும். மக்களால் மக்களை ஆட்சி செய்ய தேர்வுசெய்யப்பட்ட அரசு பாரபட்சமின்றி நேர்மையுடன் செயல்படவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
– பெ. வெள்ளைத்துரை