கேட் தேர்வு

மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான கேட் 2022 தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 5, 6, 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ்  உட்பட 27 பாடப் பிரிவுகளில் நடத்தப்படும். தற்போது புதிதாக கடற்படை கட்டிடக்கலை, கடல்சார் பொறியியல் என 2 தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தத் தேர்வுக்கு மாணவர்கள் ஆகஸ்ட் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி செப்டம்பர் 24. தாமதக் கட்டணத்துடன் சேர்த்து அக்டோபர் 1 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நவம்பர் 1 கடைசித் தேதி. தாள்கள் மாற்றம், தேர்வு மையம் மாற்றம் ஆகியவற்றைக் கூடுதல் கட்டணத்தோடு மேற்கொள்ள நவம்பர் 12 கடைசித் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.