திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள அற்புத ஜெபகோபுரம் ஏ.ஜி தேவாலயத்தின் 40ம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்று பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், அண்மையில் சர்ச்சைக்குறிய வகையில் பேசி கைதான பாதிரி ஜார்ஜ் பொன்னையாவின் ‘தி.மு.க ஆட்சிக்கு வந்தது கிறிஸ்தவர்கள் போட்ட பிச்சை’ என்ற கருத்தை மெய்ப்பிக்கும் விதமாக, ‘கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தினால்தான் தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ளது’ என தெரிவித்தார். அமைச்சரின் இந்த பேச்சு, பொதுமக்களிடமும் தி.மு.கவினரிடமும்கூட சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது சிறுபான்மையினருக்கு நன்மை செய்ததாகவும், கடந்த 7 வருடங்களாக அவர்கள் துன்பப்பட்டு வருவதாகவும் பொதுமேடையில் அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார். அமைச்சரின் இது போன்ற கருத்துகள், தி.மு.கவின் ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே அமைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.