ஒலிம்பிக் அற்புதத் தருணங்கள்

ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் கடந்த ஆகஸ்ட்1ம் தேதி நடந்தது. அதில் கத்தாரின் பார்ஷிம் என்பவரும் இத்தாலியின் டம்பேரி என்பவரும் தங்கத்துக்காக கடுமையாக போராடினார்கள். இருவரும் 2.37 மீட்டர் உயரம் தாண்டினர். எஞ்சியவர்களால் முடியாமல் போனது. அதன்பின் இருவருக்கும், 2.37 மீட்டரைவிட உயரமாக வைத்து இருவரில் ஒருவரை தங்கப் பதக்கத்திற்காக தேர்ந்தெடுக்க முயற்சித்தனர் போட்டியாளர்கள். மூன்று முறை முயற்சித்தும் இருவராலும் தாண்ட முடியவில்லை. இறுதியாக ஒரே ஒரு வாய்ப்பு கொடுக்க, இத்தாலி வீரர் டம்பேரி காலில் அடிபட்ட வலி காரணமாக பின் வாங்குவதாக அறிவித்தார். ஆனால் கத்தார் வீரர் அதன்பின்பு செய்த செயல்தான் அற்புதமானது. அவருக்கு தங்கம் உறுதியாக கிடைக்கும் என்று தெரிந்த பின்னரும் போட்டி நடத்தும் அதிகாரிகளிடம், “நானும் போட்டியில் இருந்து விலகினால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்க “இருவருக்கும் பதக்கத்தை பகிந்தளிப்போம்” என்று கூறினர். உடனே அவரும் பின்வாங்குவதாக அறிவித்தார். எதிர் வீரரின் திறமையையும் விடாமுயற்சியையும் மதித்து அவரும் பரிசு பெற தகுதியானவரே என்று அங்கீகரித்து சக போட்டியாளரிடம் தன் நட்பை நிருபித்தார் கத்தார் வீரர் பாஷிம். அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இருவருக்கும் தங்கப் பதக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒலிம்பிக் வரலாற்றில் மிக அற்புதமான தருணங்களில் இதுவும் ஒன்று.