ஜம்மு காஷ்மிரில் அரசு பணியில் சேர்வதற்கும் வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் பெறுவதற்கும் குற்றப்பிரிவு காவல்துறையில் (சி.ஐ.டி) இருந்து ‘செக்யூரிட்டி கிளியரன்ஸ்’ எனப்படும் நற்சான்றிதழ் அறிக்கையை பெற்று சமர்ப்பிக்கவேண்டியது கட்டாயம். இதற்கான சட்டத்திருத்தம் சமீபத்தில் செய்யப்பட்டது. அதன்படி, இதற்காக விண்ணப்பிக்கும் நபர், அரசியல் கட்சிகள், வெளிநாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் உள்ளிட்டவற்றுடன் சம்பந்தப்பட்டவரா, அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் யாரேனும் அவற்றில் தொடர்பில் இருக்கின்றனரா என்பது ஆராயப்படும். அவரின் அனைத்து டிஜிட்டல் ஆவணங்கள், குற்ற வழக்கு ஆவணங்கள் ஆராயப்படும். அதன் பின்பே அவருக்கு நற்சான்றிதழ் கிடைக்கும். இதனால், வன்முறையாளர்கள், பயங்கரவாத ஆதரவாளர்கள், கல் எறிபவர்கள் என அனைத்துவகை தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும் வழக்குக் கொண்டுவந்துள்ளது ஜம்மு காஷ்மிர் யூனியன் பிரதேச நிர்வாகம்.