சீன ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு

பாரத திபெத் சஹயோக் மஞ்ச் அமைப்பு என்பது திபெத்திய சுதந்திர இயக்கத்தை ஆதரிக்கும் பாரதத்தவர்களின் ஒரு குடை அமைப்பு. இவ்வமைப்பு வரும் அக்டோபர் 20’ஐ சீன ஆக்கிரமிப்பு, ஆட்சிக்கு எதிரான போராட்ட நாளாக அனுசரிக்க முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்வில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிக்யாங் (மத்திய திபெத்திய நிர்வாகத் தலைவர், தர்மசாலா) பென்பா செரிங் கலந்துகொள்கிறார். உலகம் முழுவதும் உள்ள திபெத்தியர்களுக்கான மிக உயர்ந்த அரசியல் தலைவராக இவர் அங்கீகரிக்கப்படுகிறார். அருணாசலப் பிரதேசத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1962ல் இந்த நாளில்தான் சீன அரசின் ராணுவம் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.