சர்வதேச நீதிபதிகள் ஆணையம் (ஐ.சி.ஜெ) என்ற அரசு சாரா சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஜெனீவாவை தலைமையிடமாகக்கொண்டு செயல்பகிறது. இது தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தரத்தை உருவாக்கும் மூத்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் உட்பட 60 புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களைக் கொண்ட அமைப்பு. இந்த அமைப்பு சமீபத்தில் பாகிஸ்தானில் மத உரிமைகள் மீறப்படுவது, சிறுபான்மையினர் மீதான தக்குதல்கள், துன்புறுத்தல்கள், அஹமதியா என்ற சக முஸ்லிம் பிரிவினர் மீதான வன்முறைகளை கண்டித்துள்ளது. பாகிஸ்தான் அரசு இந்த அத்துமீறல்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இவற்றை கண்டுகொள்ளாமல் இருப்பது பாகிஸ்தான் அரசின் தோல்விகளையே காட்டுகிறது என்றும் கூறியுள்ளது.